#Breaking : என்னாது நயன்தாராவுக்கு குழந்த பொறந்துடுச்சா! கல்யாணம் ஆகி 4 மாசம் தானே ஆச்சு! - Seithipunal
Seithipunal


விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது! 

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக செல்வதும் சமூக வலைத்தளங்கள் புகைப்படம் பதிவிடும் விதமாக இருந்தனர். கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவருக்கும் சென்னையில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலகத்தினர், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

மிகவும் பாதுகாப்பான முறையில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் "நானும் நயன்தாராவும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆன் குழந்தை பிறந்துள்ளது. எங்கள் அனைவரின் பிரார்த்தனையும், எங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதமும் ஒருங்கிணைத்து எங்களுக்காக இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்கள் உலகிற்கும் உயிருக்கும் வேண்டும்" என புகைப்படங்களுடன் ட்விட் செய்துள்ளார்.

இணையதள வாசிகள் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இன்னும் சிலர் திருமணம் ஆகி நான்கு மாதங்களே ஆன நிலையில் அதற்குள் எப்படி குழந்தை பிறந்தது என சந்தேகம் எழுப்புகின்றனர். எனினும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் இச்செய்தியினை கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vignesh Sivan Nayanthara has given birth to twin boys


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->