அஜித் படத்தை இயக்க விக்னேஷ் சிவனுக்கு எவ்வளவு தெரியுமா சம்பளம்.?! - Seithipunal
Seithipunal


எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த 24ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்களும் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், இந்த வாரம் ஓடிடியில் படம் வெளியாகஉவுள்ளது. 

சமீபகாலமாக அஜித்தின் அடுத்த படம் #AK61 குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை போனிகபூர் இயக்க எச்.வினோத் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது. AK61 படம் குறித்த தகவலே இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், நடிகர் அஜித்தின 62வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் அனிருத் இசையமைக்க, நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்க இயக்குனர் விக்னேஷ் சிவன் ரூ.50 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vignesh sivan salary For ak62


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->