விஜயின் 66-வது படத்தில் வில்லன் யார் தெரியுமா.?! நடிகை குறித்த தகவல்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது. இதில் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார்.

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார். தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது இதில் வில்லனாக நடிகர் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இதில் நடிகர் விஜய்க்கு கதாநாயகியாக நடிகை மெஹ்ரீன் பிர்ஸாதா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay 66 movie villain update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->