பழைய தோற்றத்தில் விஜய்: வெளியான 'விஜய் 68' அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை தொடர்ந்து தனது 68 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வெங்கட் பிரபு பிறந்தநாளுக்கு முன்பாக தாய்லாந்தில் முக்கியமான சண்டை காட்சி படமாக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டீஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யின் பழைய தோற்றத்தை பயன்படுத்தி உள்ளதாகவும் பகவதி, யூத் திரைப்படத்திலிருந்த விஜய் தோற்றம் இந்த திரைப்படத்தில் 10 நிமிட காட்சியாக இடம் பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay 68 update released


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->