அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் - முன்னாள் அமைச்சர் தங்கமணி.! - Seithipunal
Seithipunal


ஒரு குடும்பத்தில் நிலவும் பிரச்சினையை பேசி தீர்ப்பது போல அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலையும் பேசித் தீர்ப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் தெரிவித்ததாவது:-

"அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் விவகாரம் பொதுச்செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிமுக என்பது ஒரு குடும்பம். கட்டுக்கோப்பான இயக்கம். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைவரிடத்திலும் அரவணைத்து பேசி ஒரு குடும்பத்தில் நிலவும் பிரச்சினையை பேசி தீர்ப்பது போல அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலையும் பேசித் தீர்ப்போம்.

வருகின்ற 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவி ஏற்பார். அதிமுக கட்சியின் அடுத்தக்கட்ட கள ஆய்வுகள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்றுத் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister thangamani press meet about admk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->