கல்கி கி.பி 2898 1000 கோடி கலெக்ஷன் செய்யுமா ? உத்தரவாதம் அளித்த நட்சத்திரம் !! - Seithipunal
Seithipunal


கல்கி 2898 AD ஜூன் 27 அன்று வெளியானது, இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 ADயில், பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், டோலிவுட் சூப்பர் ஸ்டார் பிரபாஸ் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அர்ஜுன் வேடத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். கல்கி கி.பி 2898 அர்ஜுனாக (கேமியோ ரோல்) விஜய் தேவரகொண்டா நடித்து அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். விஜய் தேவரகொண்டா கல்கி 2898 AD திரைப்படத்தை பற்றி ஒரு பெரிய கணிப்பு செய்துள்ளார். இப்படம் 1000 கோடி வசூல் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கல்கி படத்தை திரையில் பார்த்து ஆச்சரியமடைந்த விஜய் தேவரகொண்டா தனது X பக்கத்தில் ஒரு பதிவில், "படத்தை இப்போதுதான் பார்த்தேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் திகைத்துவிட்டேன். இந்த திரைப்படம் 1000 கோடி மற்றும் அதற்கு மேல் வசூல் செய்யும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

கல்கியை பார்த்து திகைத்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கல்கி பட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்  ராஷ்மிகா மந்தனா தனது X பக்கத்தில் "நம்முடைய புராணக் கடவுள்களை இப்படி திரையில் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தது. என்ன ஒரு பிரமாண்டமான படம்!! என தெரிவித்தார்.

கல்கியின் கதை ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, கல்கி 2898 AD மகாபாரத காலத்திற்கு அடுத்த 6000 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கதை, இதில் காசி பைரவா என்ற வேட்டைக்காரனாக பிரபாஸ் நடிக்கிறார்.

அமிதாப் பச்சன் தனது கதாபாத்திரத்துக்காக நிறைய பாராட்டுகளைப் பெற்றார், கல்கி கி.பி 2898 இல், அமிதாப் பச்சன் துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா வேடத்தில் நடித்துளார். மேலும் படம் முழுக்க ஆதிக்கம் செலுத்திய அமிதாப் பச்சனை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். கதாநாயகி தீபிகா படுகோன் சக்தி வாய்ந்த கதாபாத்திரமான சுமதி என்ற கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார். மிரட்டலான தலைவர் சுப்ரீம் யாஸ்கின் வேடத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

கல்கி 2898 கிபி 200 கோடியைத் தாண்டியது. கல்கி 2898 கி.பி ரூ.213.66 கோடி சம்பாதித்துள்ளது (29 ஜூன் 8 மணி இரவு வரை ).


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay devarkonda praised the kalki movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->