சூப்பர் ஸ்டாருக்கு அச்சமா.? பரபரப்பை கிளப்பிய போஸ்டர் கிழிப்பு.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அந்த படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறி விஜய் ரசிகர்களை உசுப்பேத்தி விட்டார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இதனால் வீறு கொண்டு எழுந்த விஜயின் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட தளபதி பட்டம் தான் பெரியது என சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு எதிராக பொங்கி எழுந்த ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த், உலக நாயகன் என்றால் அது கமலஹாசன் தான். ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது என கருத்துக்களை பதிவிட தொடங்கியதால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்த இந்த வார்த்தை போர் தற்போது வரை நீடித்து வருகிறது. இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெய்லர் படத்தின்  இரண்டாவது பாடல் "ஹூக்கும்" வெளியிடப்பட்டது. அந்த பாடலில் குறிப்பாக "பேர தூக்க நாலு பேரு.. அத்தனை பட்டத்தை பறிக்க 100 பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா.. உசுரு கொடுக்க கோடி பேரு.." என பாடல் வரிகள் அமைந்திருந்ததால் விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களிடம் கல்லடி படுவது போன்று சொல்லடி பட்டனர்.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கழுகு காக்கை கதையை சொல்லி நடிகர் விஜய்யை மறைமுகமாக சாடினார். நடிகர் ரஜினிகாந்தின் இத்தகைய பேச்சுக்கு லியோ பட இசையில் வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் நிச்சயம் பதிலடி கொடுப்பார் என தளபதி விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே விஜய் ரசிகர்கள் ரஜினியை வம்பிழக்கும் வகையில் மதுரையில் "என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்.. என் நெஞ்சில் குடியிருக்கும் இதயதளபதி இளைய தளபதி.. தளபதி.." என பரபரப்பான போஸ்டரை ரஜினி புகைப்படத்துடன் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதனை கண்ட ரஜினி ரசிகர் ஒருவர் அந்த போஸ்டரை கிழித்தெறிந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ரஜினி ரசிகர் போசரை கிழிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay fans posters against Rajinikanth were torn down in Madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->