விஜய் ரசிகர்களே ரெடியா? தளபதி 67 படத்தின் டைட்டில் குறித்த முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின் விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 

லோகேஷ் கனகராஜ் இயக்குகின்ற இந்த திரைப்படத்திற்கு தளபதி 67 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

அந்த வகையில் தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு அறிவித்து வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை ப்ரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மன்சூர் அலிகான், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின், ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து 3வது நாளாக தளபதி 67 படத்தின் அப்டேட்களை படக்குழு அறிவித்து வருகிறது. அதன்படி, தளபதி 67 படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவியும், ஓடிடி ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் ‘தளபதி67’ படத்திற்கான டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay in Thalapathy67 movie title tomorrow announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->