விஜயின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யார்? யார்? பங்கேற்கிறார்கள் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதில், சரத்குமார், ஷியாம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

இந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜய் டிவி பிரபலம் ராஜூ சுந்தரம் தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay in varisu movie audio launch update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->