விஜய் சேதுபதி நடித்த முதல் இந்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கதாநாயகன் மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் "மெரி கிறிஸ்துமஸ்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார் கபூர், வினய் பதக், டினு ஆனந்த், பிரதிமா காஷ்மீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தி மற்றும் தமிழ் மொழியில்திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல டிப்ஸ் இசை நிறுவனம் மேட்ச்பொக்ஸ் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது. விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மெரி கிறிஸ்மஸ் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 15ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Sethupathi first Hindi film Merry Christmas release on Nov15th


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->