விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்துமஸ்' ரிலீஸ் தேதி மாற்றம்!  - Seithipunal
Seithipunal


விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. இந்த திரைப்படம் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான இந்தி படம் அந்தாதூன். 

வெற்றி பெற்ற இந்த படம் தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை இயக்கிய ஸ்ரீ ராம் ராகவன் அடுத்ததாக இயக்கும் படம் 'மெரி கிறிஸ்துமஸ்' விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் தள்ளி போனது. 

இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என பட குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. 

மேலும் இந்த படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பட குழு வெளியிட்டது. இந்நிலையில் பட குழு இந்த படத்தின் வெளியிட்டு தேதியை மாற்றி அமைத்துள்ளது. 

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு வாரம் முன்கூட்டியே இந்த படம் வெளியாக உள்ளது. அதன் அடிப்படையில் இந்த படம் டிசம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sethupathi Merry Christmas Release Date Changed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->