டி.எஸ்.பி தோல்வி.. விஜய் சேதுபதி அதிரடி முடிவு.. விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் தோல்வி அடைந்த காரணத்தால் அவரது ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட்களை ஆப் செய்து விட்டு பதிவிட்டு கொண்டிருக்கிறார். 

இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி, விக்ரம், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படம் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, சீம ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

https://twitter.com/VijaySethuOffl/status/1600097923047780353?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1600097923047780353%7Ctwgr%5Ed4571f47c5bd2d8eb370f1204d88925ae42d9957%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2022%2Fdec%2F07%2Fvijay-sethupathy-dsp-movie-3962811.html

இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாகியது. படம் வெளியான மறுநாளே வெற்றி என்று விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஆனால், ரசிகர்கள் இதை படுமோசமாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். படம் மிகவும் மோசமாக இருக்கிறது என்ற காரணத்தால் ட்விட்டரில் விஜய் சேதுபதியை ரசிகர்கள்ட் ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இத்தகைய நிலையில் விஜய் சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட்ஸ் பதிவிடாதபடி ஆப் செய்யப்பட்டுள்ளது. என்னதான் கமெண்ட்களை ஆப் செய்தாலும் கூட ரசிகர்கள் மற்ற பேஜ்களில் விஜய் சேதுபதியை கலாய்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sethupathy get Of comments For escaping Trolls


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->