ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - நடந்தது என்ன?

கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தமிழ் மெகாத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தத் தொடரின் கதாப்பாத்திரங்களை தங்கள் வீட்டின் உறுப்பினர்களில் ஒருவராகவே நினைத்தவர்கள் அதிகம். 

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்தது. ஒரு சாமானியக் குடும்பத்தின் நான்கு சகோதரர்கள். கூட்டுக்குடும்பமாக வாழ முற்படும் அவர்களுக்கிடையிலான பாசம், நேசம் மட்டுமன்றி உறவின் கசப்புகளையும் இந்த நெடுந்தொடர் பதிவு செய்தது. 

குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வசீகரிக்கச் செய்யும் வகையில் காதல், மோதல், பழிவாங்கல் என்று அனைத்தும் கலந்த கலவையான இழைகள் இத்தொடரில் இருந்தன. மேலும், குடும்பக் கதையில் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் என்றெல்லாம் கூடுதல் சுவாரசியங்களை கொடுத்தது.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் அதன் பயணத்தில் உச்சத்தை எட்டியிருப்பதாலும், 5 வருடங்களை கடந்திருப்பதாலும், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் இந்தத் தொடருக்கு தற்காலிக முற்றும் போட உள்ளார்கள். இதுமட்டுமல்லாமல், இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay tv pandiyan stores serial completion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->