விஜய்க்கு இப்படி ஒரு செல்ல பெயர் இருக்கா? லைவாக தாயுடன் உரையாடிய தளபதி.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர். இவரது நடிப்பில் இறுதியாக பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் கொண்டாடப்படவில்லை. 

அடுத்ததாக விஜய் வம்சி இயக்குகின்ற வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இதில் ராஷ்மிகா அவருடன் ஜோடியாக நடிக்கும் நிலையில், சமீபத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் கலக்கி வருகிறது. 

இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜயின் தாய் சோபா கலந்து கொண்டார். அப்போது அந்த பேட்டியில் இருந்து விஜய்க்கு கால் செய்து, "ஜோ எங்கம்மா இருக்க?" என்று கேட்கின்றார். அதற்கு விஜய் தான் ஷூட்டிங்கில் இருப்பதாக பதில் அளிக்கிறார். 

தொடர்ந்து விஜய்க்கு பிடித்த சர்க்கரை பொங்கலை செய்ததாக ஷோபா கூறுகின்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. விஜயின் செல்லப் பெயர் ஜோ என்பது தெரியவந்துள்ளதால் ரசிகர்கள் அதை டிரண்டாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijays mother called vijay as joe in call


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->