சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் மேம்படுத்துதல் பணி..உப்பளம் தொகுதி MLA தொடங்கி வைத்தார்!
Improvement of roads and drains. MLA inaugurates Uppalam constituency
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை , ஜெயராம் செட்டியார் தோட்டத்தில் உள்ள சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் மேம்படுத்துதலுகான பூமி பூஜையை அனிபால் கென்னடி ஏம் எல் ஏ ரூ.43,18,020 செலவில் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை , ஜெயராம் செட்டியார் தோட்டத்தில் உள்ள சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் மேம்படுத்துதலுகான பூமி பூஜையை சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நகராட்சி மூலம் ரூ.43,18,020 செலவில் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது,
ஜெயராம் செட்டியார் தோட்டத்தில் உள்ள சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் சீர் அமைக்கவேண்டி பொது மக்கள் வாயிலாக சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களிடம் கோரிக்கை வைக்கபட்டது, இதனை கருத்தில் கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் இன்று அப்பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார், அப்பொழுது பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்து மகிழ்ந்து பாராட்டினார்கள்,
அப்போது நிகழ்ச்சியில் உடன் நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ், பணி ஆய்வாளர் ரவிச்சந்திரன் , ஒப்பந்ததாரர் மோகனசுந்தரம், திமுக தொகுதி அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், காங்கிரஸ் மாநில செயற் குழு உறுப்பினர் தமிழ் செல்வம், திமுக தொகுதி துணை செயலாளர் ராஜி மற்றும் நிசார், கிளை செயலாளர்கள் சுகுமார், சந்துரு, செல்வம், களப்பன், ராகேஷ், தொழில்நுட்ப அணி கவி, கழக சகோதரர்கள் விநாயகம், மோரிஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.
English Summary
Improvement of roads and drains. MLA inaugurates Uppalam constituency