லியோவில், விக்ரம் பட சந்தானம்.?! விஜய் சேதுபதியை உறுதி செய்த அப்டேட்.?!  - Seithipunal
Seithipunal


தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜயுடன், த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய்  தத் என மிகப் பெரிய  நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தின்  சூட்டிங் தற்போது காஷ்மீரில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தளபதி 67 படத்தில் விஜய்  லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அவரது ரசிகர்கள்  இத்திரைப்படத்திற்கான அப்டேட்டை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் படக்குழுவினர் சில வாரங்களுக்கு முன்பு  அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு தளபதி ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடையச் செய்தனர். மேலும் திரைப்படத்தின் பெயர் மற்றும் ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டு  ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகளை போலவே அவ்வப்போது சர்ச்சைகளும்  கிளம்பின. இப்படத்தின் கதாநாயகி திரிஷா படப்பிடிப்பில் இருந்து  விலகியதாக சில நாட்களுக்கு முன் வதந்திகள் பரவின. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காதலர் தினத்தன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களுக்கு உண்மையை வெளிப்படுத்தினார் திரிஷா. தற்போது படத்தின் துணை எழுத்தாளரும் வசனகர்த்தவுமான இயக்குனர் ரத்தினகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற   செய்திருக்கிறார்.

அந்தப் புகைப்படத்தில் ஒரு கண்ணாடியை கையில் வைத்துக் கொண்டு 'நெவர் சேட்டை' என்ற வாசகத்துடன் லியோ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து  புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படத்தினை டி கோடு செய்துள்ள ரசிகர்கள் இது விக்ரம் படத்தில் சந்தானமாக நடித்த விஜய் சேதுபதி அணிந்திருந்த கண்ணாடியின் ஒரு பகுதி எனவும் மேலும் விஜய் சேதுபதி தளபதியின் லியோ படத்தில் நடிக்க இருப்பதை தான்  ரத்னகுமார் இவ்வாறு சூசகமாக தெரிவித்து இருக்கிறார் என்றும்  சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijaysethupathy will be a part of leo ratna kumar tweet spark discussion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->