விக்ரம் லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்களுக்கு இன்ப செய்தி.! ரெட் ஜெயண்ட் வெளியிட்ட அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாக இருக்கிறது. பகத் பாஸில், விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். 

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் என்ற காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. 

சமீபத்தில் இதன் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மே மாதம் இரண்டாம் வாரத்தில் விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக நடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் வரும் மே 15-ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikram audio launch date may 15th


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->