ஆஸ்கருக்குச் செல்லும் விக்ரமின் தங்கலான் திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கேஜிஎஃப் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து அங்கு நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தில் முதல்முறையாக சியான் விக்ரம் ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் இவருடன் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கே ஜி எஃப் தங்க சுரங்கங்களில் இத்திரை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோக்கள் உலக சினிமா தரத்திற்கு தமிழ் சினிமாவில் ஒரு படம் உருவாகி வருவதை காட்டின.

இந்த நிலையில் தங்கலான் திரைப்படம் ஆஸ்கர், கேன்ஸ் உள்ளிட்ட 8 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram in thangalan movie goes to Oscar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->