மீண்டும் இணைந்த விஷால் - ஹரி கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இதில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஷாலின் 34 வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இயக்குனர் ஹரி - விஷால் கூட்டணியில் ஏற்கனவே தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal 34th movie directed by Hari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->