சென்னை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்! - Seithipunal
Seithipunal


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஜி.வி. பிரகாஷ் இமைக்கும் இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்து திரையிடுவதற்கு ரூ. 3 லட்சமும் சான்றிதழுக்கு ரூ. 3.5 லட்சம் என மொத்தம் ரூ .6.5 லட்சம் மும்பை சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுத்ததாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

மேலும் இடைத்தரகரிடம் ரூ. 6.5 லட்சம் பணத்தை இரு தவணைகளாக கொடுத்ததாகவும் நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். 

அதனுடன் பணம் செலுத்திய வங்கி கணக்கு ஆதாரங்களையும் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. 

இந்நிலையில் மும்பையில் 4 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இடைதாரார்களாக செயல்படுபவர்களின் வங்கி கணக்குகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. 

அதன்படி நடிகர் விஷால் தனது மேலாளர் ஹரிகிருஷ்ணன் உடன் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal appears cbi office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->