ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு, இலங்கை அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு..!
Sri Lankan team players announced for the Test series against Australia
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29-ஆம் தேதி காலி மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் குறித்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்சய டி சில்வா தலைமையிலான அணியில் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி விவரம் பின்வருமாறு:-
தனஞ்சய டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்ன, நிசங்க, ஓஷடா பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மத்தியூஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சோனல் தனுஷ, பிரபாத் ஜெயசூர்ய, ஜெப்ரி வாண்டர்சே, நிஷான் பெய்ரிஸ், அசிதா பெர்னண்டோ, விஷ்வா பெர்னண்டோ, லஹிரு குமர மற்றும் மிலன் ரத்னாயக்க.
English Summary
Sri Lankan team players announced for the Test series against Australia