டெல்லியில் இந்திய குடியரசு தின விழா; பஞ்சாயத்து தலைவர்கள் 600 பேருக்கு அழைப்பு..!
600 panchayat leaders invited to the Indian Republic Day celebrations in Delhi
இந்திய குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று டெல்லியில் உள்ள கடமை பாதையில் (கத்தர்வ்யா பாத்) ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றுவார்.
அத்துடன், கடமை பாதையில் ராணுவ அணிவகுப்பும் நடைபெறும். குறித்த நிகழ்வில் பிரதமர், மந்திரி மந்திரிகள், வெளிநாட்டு தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்வர்.
இந்நிலையில், இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய ஜனதிபதி பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
அத்துடன், சுகாதாரம், கல்வி, பெண்கள் குழந்தைகள் முன்னேற்றம், குடிநீர், தூய்மைப்பணி, பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்களில் தங்கள் பஞ்சாயத்தை சிறப்பாக வழி நடத்திய 600 பஞ்சாயத்து தலைவர்களுக்கு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
600 panchayat leaders invited to the Indian Republic Day celebrations in Delhi