"விஜய் ஒரு தீக்குச்சி.. இந்தியாவிலேயே விஜயை போல முடியாது." - விவேக் பேச்சு.!  - Seithipunal
Seithipunal


வாரிசு ஆடியோ லாஞ்ச் விழாவில் பேசிய பேசிய பாடலாசிரியர் விவேக், "நடிகர் விஜய் போல ஒரு சிறந்த பொழுதுபோக்காளரை இதுவரை இந்தியாவில் யாரும் பார்த்திருக்க முடியாது." என்று பெருமையாக கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசியவர், "சில விஷயங்கள் நமக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும். மிகப்பெரிய இருட்டை ஒரு சிறிய தீக்குச்சி எப்படி ஜெயிக்கிறதோ அப்படித்தான் விஜய் எனும் காந்தம் இந்த கூட்டத்தை கவர்ந்துள்ளது. 

ஒரு நாள் கூட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது விஜய் செல்போன் நோண்டியது இல்லை. ஷூட்டிங்கிற்க்கு தாமதமாக வந்ததும் இல்லை. படப்பிடிப்பை முடித்தவுடன் கேரவனுக்கு ஓட்டம் பிடிப்பதும் இல்லை. அவருடன் பயணித்தவரை எந்த குறை கூட சொல்லி விட முடியாது.

அந்த அளவிற்கு அவர் நடந்து கொள்வார்  எப்படி ஒரு மனிதர் இப்படி இருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. அவர் மீது குறை சொல்வது அவரது ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு பாஸ் கிடைப்பதை விட கடினமான ஒரு விஷயம். 

ஷூட்டிங்கில் தளபதியாகவும், அரசனாகவும் இல்லாமல் ஒரு சாதாரண மனிதனாக விஜய் எங்களிடம் நடந்து கொண்டார். அவரை போல ஒரு என்டர்டைனரை இந்தியா பார்த்ததில்லை." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vivek speech about Vijay In varisu audio launch 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->