பாய் பெஸ்ட்டிக்களுடன்.. பிக்பாஸ் பிரபலம் செய்த சேட்டை.! வச்சி செய்த நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று பிரபல  பொறுப்பாளராக வலம் வருபவர் VJ மகேஸ்வரி. புதுக்கவிதை என்னும் தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் மகேஸ்வரி. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேட்டை ராப் மற்றும்  காமெடி கில்லாடிஸ் ஆகிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியவர். பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார். கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த விக்ரம் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு இவருக்கும் சாணக்கியன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். தற்போது தனது மகனுடன் வசித்து வருகிறார் VJ மகேஸ்வரி.

இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றி உள்ளார். அந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண் நண்பர்களுடன் சமையல் செய்து அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவிற்கு ஆபாசமாக பின்னூட்டமிட்டு வரும் ரசிகர்கள் அந்த வீடியோவை வைரல் செய்து கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vj maheshwari cooking with boyfriends goes viral on nsta


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->