'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்.! புகைப்படத்துடன் சிம்பு வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிம்பு மாநாடு திரைப்படத்திற்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த 2 படங்களையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறி சிம்பு ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கண்களில் கோபத்துடன், கையில் துப்பாக்கியுடன் சிம்பு இருக்கும் அந்த புகைப்படம் நிச்சயம் படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்ற எண்ணத்தை கொடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vtk movie wrap post viral 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->