தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை நீக்கம்! மேற்கு வங்க மாநில அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்!
WB govt The kerala story movie ban issue
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இந்த கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மறைமுகமாகவோ, நேரடியாகவோ தடை விதைக்க கூடாது என்ற ஒரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா, அம்மாநிலத்தில் வெளியிட தடை விதிப்பதாக அறிவித்தார்.
இதனை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், "சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மாநில காவல் துறையின் கடமை.
படம் பார்க்க செல்வோருக்கு தேவைப்பட்டால் மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் கேரளா ஸ்டோரி படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உத்தரவிட்டது.
English Summary
WB govt The kerala story movie ban issue