"என்னைய விட்டுறுங்க"... தனிமையில் நாட்களைக் கழிக்கும் தளபதி விஜய்! திடீர் முடிவிற்கு காரணம் என்ன! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தபடியாக அதிகமான ரசிகர்களை கொண்டிருப்பது இவர்தான். தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபகாலமாகவே இவரது குடும்பங்கள் தொடர்பான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தனது தாய் மற்றும் தந்தையின் மீது  தளபதி விஜய்க்கு இருக்கும் மனக்கசப்பு குறித்து சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தன்னுடைய தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனி வீட்டில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாகவும் சினிமா வட்டாரங்களில்  கிசுகிசுக்கள் பரவின. நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் காதலித்து வருவதாகவும் அதன் காரணமாக அவரது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சமீபத்திய தோல்விகளால் விஜய் பெரும்பாலும் அவருடைய நேரங்களை தனிமையிலேயே கழித்து வருவதாக புதிய செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அவரது மனைவி சங்கீதா, குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகளில் எந்த அளவிற்கு உண்மை என்பது போக போக தான் தெரியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is the reason behind Thalapathy Vijay sudden decision to spend days in solitude


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->