அச்சச்சோ... சிவகார்த்திகேயனுக்கு 'நோ' சொன்ன அனிருத்! குழப்பத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவா கார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இவ்வாறு இன்று டாப் 10 தமிழ் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா கார்த்திகேயன் மற்றும் அனிருத் இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெறும். இதுவரை ஏழு படங்களில் இவர்கள் இருவரும்  இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். அந்த ஏழு திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக அமைந்திருக்கின்றன.

இந்நிலையில் சிவ கார்த்திகேயனின் புதிய படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய சென்றபோது அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கோடம்பாக்கத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்களும் சொல்லப்பட்டன.

ஆனால் தற்போது அனிருத் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார். தளபதி மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ  திரைப்படத்திற்கும் இசையமைத்து வருவதால் அவரால் சிவ கார்த்திகேயன் படத்தில் கமிட்டாக முடியவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What was Anirudh reason for saying no to Shiva Karthikeyan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->