அச்சச்சோ... பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி.! அவரே வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் ஷாக்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் முக்கியமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான இந்த தொடர் குடும்ப கதையாக இருந்தாலும் அவர்களது வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகள் கோபி மற்றும் பாக்யாவிற்கிடையே நடந்த மோதல் ஆகியவை இந்தத் தொடர் விறுவிறுப்பாக செல்வதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

டிஆர்பி யில் என்றுமே முன்னணியில் இருக்கும் இந்த பாக்கியலட்சுமி தொடரில்  கோபி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சதீஷ்குமார். இவரது நடிப்பு இந்த தொடரில் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. அந்தக் கதாபாத்திரமாகவே ஒன்றி போயிருந்த சதீஷ்குமாரின் நடிப்பால் அவர் செல்லுமிடமெல்லாம் அவரை கோபி என்று ரசிகர்கள் அழைக்குமளவிற்கு தனது கதாபாத்திரத்துடன் இருக்கமாகிவிட்டார்.

தற்போது சமூக வலைதளத்தில் இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று  பாக்கியலட்சுமி ரசிகர்களையும் சின்னத்திரை ரசிகர்களையும் மிகவும் சோர்வடைய வைத்திருக்கிறது. அந்த வீடியோவில் பாக்கியலட்சுமி கோபியை நேரடியாக தோன்றி தனது ரசிகர்களுடன் பேசியிருக்கிறார். அதன்படி தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் சதீஷ்குமார் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தான் வழங்குவது உறுதி என்றும்  இன்னும் 14 அல்லது பதினைந்து எபிசோடுகள் முடிந்த பிறகு அந்த சீரியலை விட்டு விலகுவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தனக்கு இப்படி ஒரு அற்புதமான கதாபாத்திரத்தை சேர்ந்த விஜய் டிவிக்கு தனது நன்றிகளை தெரிவித்து இருக்கிறார். எங்கு சென்றாலும் தன்னை கோபியாகவே கொண்டாடும் ரசிகர்களுக்கும் தன்னுடைய அன்பையும் நன்றிகளையும் தெரிவித்திருக்கிறார் சதீஷ்குமார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why sathish kumar biding fareell to his bakkiyalakshmi serial


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->