பெண்கள் முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு வர வேண்டும் - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


கேரள திரைத்துறையில் நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்களை ஹேமா குழு அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்த நிலையில், அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.

தற்போது இந்த அறிக்கை குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தாங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர். மேலும், பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர்.

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார்.இந்த நிலையில், முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "கேரள திரைத்துறையைச் சேர்ந்த அம்மா அமைப்பு எனக்கு உதவிகரமானதாக இருக்காது என்பதால் அதில் சேரவில்லை என்றும், பொறுப்புள்ள நபர்கள் அந்த அமைப்பை தலைமையேற்று நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

மேலும் நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதால், தங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து பதில் சொல்ல வேண்டிய இடத்திலிருந்து நழுவியுள்ளதாகவும், முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும் என்றும், பணியிடங்களில் பெண்கள் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women should come to decision making positions actress Aishwarya Lakshmi pleads


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->