கோமாளி பட இயக்குனருடன் இணைந்த யுவன்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோமாளி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தில்  யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் ஹீரோவாக ஜெயம்ரவி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கனதன் இயக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yuvan compose in comali director movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->