இன்ஸ்டாகிராமில் இருந்து விலகிய யுவன் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
Yuvan Shankar raja leave Instagram
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோட்'. யுவன் சங்கர் ராஜா இசையில் விஜயின் குரலில் வெளியான படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இருப்பினும் பாடலுக்கு எதிரான கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவியது. யுவன் சங்கர் ராஜாவையும் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஒப்பிட்டுப் பேசி சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

யுவன் இசையமைத்த பாடல் நன்றாக இல்லை எனவும் அவர் ஏன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தார் எனவும் கருத்துக்கள் வெளியானது.
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார். இதற்கு எதிர்மறை கருத்துகள் தான் காரணமா என ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.
English Summary
Yuvan Shankar raja leave Instagram