கமலின் இந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்  இந்தியன் 2 படத்தில் நடித்து வருவதாக பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி வந்த நிலையில், கிரேன் விபத்து ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2020இல் இந்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை  படக்குழு வெளியிட்டு படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் முதல் 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திர கனி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே பஞ்சாப் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இதற்கு முன்னர் தர்பார் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yuvraj Singh father acted in Indian 2 movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->