மதுரை தமுக்கம் மைதானத்தில், நடைபெறும் பொருட்காட்சி! கூட்டம் கூட்டமாக வரும் மக்கள்!!
Madurai Thamukkam Exhibition
வருகின்ற ஜீன் 13ஆம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி நிறைவடைவதை முன்னிட்டு இதுவரை 1.80 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த பொருட்காட்சி மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. செய்தி மக்கள் தொடர்புத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை,பள்ளி கல்வித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, காவல்துறை உட்பட 27 அரசுத் துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சி சென்ற ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது.
இன்று வரை 1.80 லட்சம் பேர் பொருட்காட்சிக்கு வந்து பார்வையிட்டுள்ளனர். சென்ற ஆண்டு வந்து சென்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை விட இது இரண்டு மடங்கு அதிகம் என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சிக்கு வரும் பள்ளி கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தால் சில பொழுதுபோக்கு சார்ந்த விளையாட்டுகளில் சலுகை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் கூறியுள்ளது.
வருகின்ற ஜூன் 13ம் தேதியுடன் பொருட்காட்சி முடிவடைகிறது. தமிழக அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் இங்கு அமைக்கபட்டு இருக்கும் அரங்குகளில் விளக்கப்படும். மாலை 3.45 மணி முதல் இரவு 9.30 மணிவரை பொருட்காட்சி நடைபெறுவதாகவும் கூடுதல் தகவலாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Madurai Thamukkam Exhibition