கற்பனைக்கு எட்டாத காமத்தின் உச்சியைத் தொட்ட சிற்பி….!
கற்பனைக்கு எட்டாத காமத்தின் உச்சியைத் தொட்ட சிற்பி….!
கற்பனைக்கு எட்டாத காமத்தின் உச்சியைத் தொட்ட சிற்பி….!
கோயில்கள் என்றாலே, அது கலைகள் நிறைந்த கலைக் கூடம், என்பதாகத் தான், அன்றைய மக்களின் பார்வையில் இருந்தது. அதனால் தான், கோயிலுக்கு, மஹா மண்டபம், முக மண்டபம், தர்பார் மண்டபம் எல்லாம் கட்டி வைத்தனர்.
கோயிலுக்கு வந்தவர்கள், இளைப்பாறுவதற்காகவும், அங்குள்ள சிற்பங்களை எல்லாம் ரசித்து, வாழ்வியலைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகவும், கோயில்களில் உள்ள மண்டபத் துாண்களில், வித விதமான சிற்பங்களை வடித்து வைத்தார்கள்.
சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை, என்று சொல்வார்கள். அந்த மன்மதக் கலையைக் கூட, அற்புதமான கலை நயத்துடன், சிற்பங்களாக வடித்து வைத்திருக்கிறார்கள்.
இதில், சிற்பியின் கற்பனைத் திறன் தான் அதிகமாகப் பேசப் படுகிறது. அந்த சிற்பி, சாதாரண நிலையை விட, தன் கற்பனையில் உதிக்கும், மிக விநோதமான, மன்மதக் கலைக் காட்சிகளை எல்லாம் சிற்பங்களாகச் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
மதுரைக்கு தெற்கே உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள மண்டப வளாகத்தில் உள்ள துாண் ஒன்றில், காணப்படும் சிற்பம் மிக வித்தியாசமானதாக இருக்கிறது.

சிலை மட்டும் வித்தியாசமானது அல்ல. சிற்பி, தான் எண்ணிய மித மிஞ்சிய கற்பனையை, அப்படியே சிலையாக வடித்திருப்பது தான், ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த சிற்பத்தில், இதை வடித்த சிற்பி, கற்பனைக்கு எட்டாத காமத்தின் உச்சியைத் தொட்டிருக்கிறார்.