பரபரப்பு - சிவகங்கையில் திமுக நிர்வாகி வெட்டிக் கொலை.!
dmk excuetive murder in sivakangai
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாமியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளரான இவர் ஒப்பந்ததாரராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில், பிரவீன்குமார் இன்று பிற்பகல் தனது தோட்டத்துக்கு காரில் சென்றார்.
அவரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றது. இதைப்பார்த்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த அவரை, மீட்டு காரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரவீன்குமார் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் உறவினர்கள், நண்பர்கள் மருத்துவமனை முன்பு, மானாமதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். மர்ம கும்பலால் திமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
dmk excuetive murder in sivakangai