+2 மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு.. வெளியான முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தேர்வு எழுதிய 7,60,606 பேரில் மாணவியர்கள் 7,08,440 பேரும் மாணவர்கள் 3,52,161 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் தரப்பிலிருந்து வெளியான தகவலின் படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் தோல்வி அடைந்த மாணவர்கள் நாளை முதல் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

அதேபோன்று 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களில் குறைந்த மதிப்பெண் மற்றும் தோல்வி அடைந்தவர்கள் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே பன்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் மே 9ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th students can apply for Revaluation recurrection tomorrow onwards


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->