சென்னை || இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களுக்கு அதிரடி இலவசத்திட்டம்.! வெளியானது அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் 2022-2023 கல்வியாண்டில் மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2010-ம் ஆண்டு முதல் சென்னையை சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், 'சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம்' என்ற சிறப்பு திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது. 

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 2022-2023 -ல் இந்த திட்டத்தின்கீழ் இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகள்) சேர பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள் :

* விண்ணப்பதாரர் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
* பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம் பொருந்தும்.
* பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12thStudents collegestudents


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->