#BREAKING || தமிழகம் முழுவதும் 33 வட்டார கல்வி அலுவலர்கள் பணி.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


பொதுவாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் வட்டார கல்வி அலுவலர்களாக நியமிக்கப்படுவார்கள். வட்டார கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பெற்று பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். சமீபத்தில் தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக புகார் எழுந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்கள் இருப்பதாகவும் தலைமை ஆசிரியர்களுக்கு இணையாக பொறுப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழக முழுவதும் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் நாளை (06/06/2023) முதல் வரும்  ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்து தேர்வு நடைபெறும் தேதி தற்காலிகமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

33 block education officers job notification across TamilNadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->