இந்திய உணவுக் கழகத்தில் 5,043 வேலைவாப்ப்பு - தகுதி என்ன? முழு விவரம்! - Seithipunal
Seithipunal


இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள 5,043 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்:

வடக்கு மண்டலம் -  2,388
தெற்கு மண்டல் - 989
கிழக்கு மண்டலம் -  768
மேற்கு மண்டலம்  - 713
தென்கிழக்கு மண்டலம் - 185

பணி: இளநிலை பொறியாளர் (சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்)

வயதுவரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: சுருக்கெழுத்தாளர் நிலை -II
வயதுவரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

 

உதவியாளர் நிலை-III (பொது) உதவியாளர் நிலை-III (கணக்கு) உதவியாளர் நிலை-III (டெக்னிக்கல்)
உதவியாளர் நிலை-III (தானிய கிடங்குகள்)
உதவியாளர் நிலை-III (இந்தி)

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 

இதற்கு தகுதியானவர்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் எழுத்துத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://fci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில், எஸ், எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5043 Jobs in Food Corporation of India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->