10, 11, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு, மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு! - Seithipunal
Seithipunal


அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்று முடிந்த 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.

 இந்நிலையில் இந்த பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் மட்டும்,  www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2, 10-ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று  அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Class 10th 11th 12th by examination reconsolidation results to be released tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->