2024ஆம் ஆண்டுக்கான CUET தேர்வு எப்போது? - வெளியானது அதிகார்பூர்வத் தகவல்.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு 2022- 23ஆம் கல்வியாண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் மூலம் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான CUET தேர்வு மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வின் முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கி மார்ச் 26ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. க்யூட் நுழைவுத் தேர்வுக்கு பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் அடிப்படையில் புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன.

CUET வினாத்தாள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவு மொழி தேர்வாகவும், இரண்டாவது பிரிவு பாடங்களுக்கான தேர்வாகவும், மூன்றாவது பிரிவு பொது திறனுக்கான தேர்வாகவும் இருக்கும். இந்தத் தேர்வு வெளிநாடுகளில் உள்ள 26 நகரங்கள் உள்பட மொத்தம் 380 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CUET exam date announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->