CUET தேர்வு ஒத்தி வைப்பு - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சில காரணங்களால்” மே 15 ஆம் தேதி திட்டமிடப்பட்ட பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET)-UG டெல்லி முழுவதும் உள்ள மையங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 

"தவிர்க்க முடியாத காரணங்களால், 15 மே 2024 அன்று திட்டமிடப்பட்ட தேர்வுத் தாள்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் உள்ள மையங்களில் தேர்வு எழுதும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் மே 29 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

மற்ற மாநிலங்களில் இன்று திட்டமிடப்பட்ட தேர்வு குருகிராம், காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் நொய்டா உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேதிகளில் திட்டமிடப்பட்ட கூடுதல் தேர்வுகள் டெல்லி உட்பட அனைத்து மையங்களிலும் திட்டமிட்டபடி நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CUET exam postpond


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->