டி.என்.பி.எஸ்.சி குரூப் 2/2ஏ முதன்மை தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 16 கடைசி நாள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழக அரசு துறைகளில் காலியாக இருந்த 5,413 பதவிகளுக்கு கடந்த மே மாதம் 21ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2A முதல் நிலை தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் இருந்த முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. 

இதில் தேர்ச்சியான தகுதி பெற்றவர்களின் பெயர் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் முதன்மை தேர்வில் பங்கு பெறலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dec16 last day to apply TNPSC Group 2/2A Mains exam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->