அசத்தல் அறிவிப்பு! 100 பேருக்கு தமிழக அரசுப்பணி - துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு!
Deputy CM UdhayanidhiStalin Tiruvannamalai Sports Govt Job
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் விழாவில் அவர் பேசியாதவது, "திருவண்ணாமலையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி ஸ்டேடியம் அமைய உள்ளது.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளார். விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டிற்குள் ஹாக்கி ஸ்டேடியம் கட்டி முடிக்கப்படும்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர் & வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்காக விளையாடி பெருமை சேர்த்துள்ளனர்.
இன்னும் பல வீரர் & வீராங்கனைகள் அடையாளம் காண வேண்டும் என்ற லட்சியத்தோடு, ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை’ வருடந்தோறும் நடத்தி வருகிறோம்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாபெரும் இயக்கமாகவே மாற்றி வருகிறோம்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி மு.க.ஸ்டாலின் பேசினார்.
English Summary
Deputy CM UdhayanidhiStalin Tiruvannamalai Sports Govt Job