எம்.பி.பி.எஸ் கலந்தாய்வு எப்போது தெரியுமா? இதுவரை 30,000 பேர் விண்ணப்பம்!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 29ம் தேதி தொடங்கியது. இன்று காலை வரை 30,000 பேர் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களில் சேர விண்ணப்பித்துள்ளனர். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வருகிற 10ம் தேதி கடைசி நாள் ஆகும்.

கால அவகாசம் அதற்கு மேல் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 15ம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ கலந்தாய்வு இந்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரையில் 69,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 59,000 பேர் பணம் கட்டி சமர்ப்பித்துள்ளனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you know when MBBS counselling So far 30000 people have applied


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->