பொங்கல் பரிசு விநியோகம் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவை வழங்கப்படுவது வழக்கம். 

அதன்படி கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாகத் தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைத் தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கும் (2025) தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். 

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt announce pongal gift package distribut date


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->