பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை... இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகிறது. இந்த கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ., பி.டெக்., ஆகிய தொழில்நுட்ப படிப்புகள் உள்ளது. 

2024-25 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 6 மணியுடன் 2 லட்சத்து 42983 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

அதில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 570 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். 1 லட்சத்து 69 ஆயிரத்து 68 மாணவர்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். 

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவு இன்றுடன் நிறைவடைய உள்ளதால் விருப்பமுள்ள மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 12ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. 

அதற்கு தகுதி பெற்ற மாணவர்களின் விவரங்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பொது பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 13ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 

கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. விரைவில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering courses application deadline today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->