நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சுமார் நானூறுக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில், நடப்புக் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக்., ஆகிய தொழில்நுட்ப படிப்புகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் 6-ந்தேதி முதல் கடந்த 6-ந்தேதி வரை நடைபெற்றது. 

பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளார்கள். அவர்களில், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 180 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். 

இதையடுத்து மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 12-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேரடி 2-ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. 

பாலிடெக்னிக் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnlea.com என்ற இணையதளத்தின் வாயிலாக நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

engineering direct second year application start today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->