10-ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். 

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூலை 2) திருப்பூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இன்று திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டு மையம், மகளிர் திட்ட அலுவலகம் சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், கணினி பயிற்றுநர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தையல் உள்ளிட்ட தொழிற்கல்வி அறிந்தவர்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதில் விருப்பம் உள்ளவர்கள் முதலில் அதற்கான இணைய தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Great employment camp today for those who have graduated from class 10


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->